ஒரு காட்டுல சிங்கராஜாவும் நரி அமைச்சரும் ரொம்ப நல்லா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க,அப்படி இருக்கிறப்ப ஒரு குரங்கு அந்த காட்டுக்கு புதுசா வந்துச்சு.


ஏமாத்து பேர்வழியான அந்த குரங்கு தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும்னு சொல்லி வெறும் கைய ஆட்டி சக்கரை வரவச்சது, இத பாத்த எல்லா மிருகங்களும் ரொம்ப பயந்து நடுங்குச்சுங்க.

இனிமே நாந்தான் உங்களுக்கு ராஜான்னு சொல்லுச்சு,இத கேட்ட மான் சொல்லுச்சு எங்களுக்கு ராஜாவா சிங்கராஜா இருக்காரு, நீ எங்களுக்கு தேவையில்லைனு சொல்லுச்சு

உடனே நான் இப்பவே பொய் அந்த சிங்க ராஜாவ தோக்கடிச்சி உங்களுக்கு ராஜாவா மாறப்போறேன்

எல்லாரும் என்கூட வாங்கனு சொல்லுச்சு


உடனே எல்லா மிருகங்களும் குரங்குகூட சேந்து சிங்கராஜாகிட்ட போச்சுங்க, அங்க போய் தன்னோட மாய ஜாலத்தை காட்டுச்சு குரங்கு,


குரங்கோட வித்தையை நல்லா உன்னிப்பா பாத்த மந்திரியான நரி ,குரங்காரே உங்ககூட போட்டிபோட எங்க அரசர் தேவ இல்லை நானே போதும் நாளைக்கு காலைல குளத்து கரைக்கு வாங்கனு சொல்லுச்சு.

நரியாரோட புத்தி கூர்மைய தெரிஞ்சு வச்சிருந்த சிங்க ராஜாவும்,மத்த மிருகங்களும் நாளைக்கு என்ன நடக்கும்கிற ஆவலோடு மறுநாள் குளத்துக்கு வந்ததுங்க


குரங்கு வந்ததும், இன்னைக்கு போட்டி தண்ணிமேலே நடக்குறதுனு சொல்லுச்சு நரி, இத கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு குரங்குக்கு

ஆனா நரி டக்குனு குளத்துல குதிச்சி தண்ணில நடக்க ஆரம்பிச்சது, இத பாத்த எல்லா மிருகங்களும் நரியார் தான் ஜெயிச்சாருனு, சொல்லி குரங்க அடிச்சி விரட்டிருச்சுங்க.


இத பாத்த சிங்கராஜா கேட்டது,அது எப்படி நரியாரே தண்ணீல நடந்தீங்கன்னு கேட்டுச்சு,

அதுக்கு நரி சொல்லுச்சு, அந்த குரங்கு தன்னோட கை இடுக்குல சக்கர கட்டிய வச்சுக்கிட்டு, மேலயும் கீழயும் ஆட்டும்போது அத நசுக்கி சக்கரையை வரவச்சது, இத பாத்து அந்த குரங்குக்கு சக்தி எதுவும் இல்லைனு தெரிஞ்சுகிட்டேன்,

ஏமாத்துறவங்க ஏமாந்து போவாங்க அப்படிங்கிற பழமொழிக்கு ஏற்ப அந்த நரிய ஏமாத்த நினச்சேன், ராத்திரியே என்னோட நண்பர்களான ஆமைகளை வரிசையா தண்ணில யாருக்கும் தெரியாம நிக்க வச்சேன்


அவுங்க நிக்கிறது எனக்கு மட்டும் தெரிஞ்சதால அவுங்கமேல நடந்து அந்த குரங்க ஏமாத்தி தொரத்தி விட்டுட்டேன்னு சொல்லுச்சு நரி


நரியோட புத்திசாலி தனத்தை பாராட்டுச்சு, சிங்க ராஜாவும் காட்டு விலங்குகளும்