ஒரு கிராமத்துல ஒரு பசு இருந்துச்சு, அதுக்கு 5 கன்னுகுட்டிங்க இருந்துச்சு.


எப்பவும் சுட்டித்தனம் செய்யும் கன்னுகுட்டிங்களுக்கு நல்ல பழக்கங்களையும் பழமொழியும் நீதியும் சொல்லிகிட்டே இருக்கும் அந்த பசு மாடு ஒவ்வொரு நாளும் சாயந்திரம் பக்கத்துல இருக்குற தோட்டத்துக்கு விளையாட போகும் அந்த கன்னுகுட்டிங்க. 

ஒன்னா சேந்து விளையாடுற கன்னுகுட்டிங்கள சாப்பிடணும்னு ஒரு ஓநாய் மறைஞ்சிருந்து பாத்துச்சு

அப்பதான் ஒரு கன்னுகுட்டி மட்டும் பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பாத்துகிட்டே தனியா வந்துச்சு

அழகான கன்னுக்குட்டியே என்னோட வரியா நான் உனக்கு மிட்டாய் வாங்கி தரேன்னு சொல்லி கூப்பிட்டுச்சு


அந்த ஓநாயோட பேச்ச கேட்டு அது கூட போகலாம்னு முடிவு பண்ணுச்சு அந்த குட்டி கன்னுகுட்டி


அப்பதான் அவுங்க அம்மா சொன்ன பழமொழி ஞாபகத்துக்கு வந்தது

"வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம்" அப்படிங்கிற பழமொழிதான் அது


என்னதான் தன்னோட நல்லா பேசுனாலும் ஓநாய் ஒரு கேட்ட

விலவங்குன்னு அதுக்கு ஞாபகத்துக்கு வந்தது


உடனே அவுங்க அம்மாகிட்ட ஓடிப்போயி நடந்தத சொல்லுச்சு


ரொம்ப நல்லது கன்னுக்குட்டியே இப்படித்தான் அம்மா பேச்ச கேட்டு நடந்து கிட்டேனா உனக்கு நல்லது


அந்த ஓநாய் உன்ன ஏமாத்தி கூட்டிட்டு போயி தின்னுருக்கும், நீ அம்மா பேச்ச கேட்ட நல்ல பிள்ளையா நடந்துகிட்டத்தால் தப்பிச்ச அப்படின்னு சொல்லுச்சு

பழமொழி : வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம்